
என் இனியவளே
காவியப்பெண்ணே என்
காதலிப்பெண்ணே
காதலிக்கிறேன் நான் உன்னை
கண் திறந்து பாரடி நீ என்னை..
உள்ளதை நீ சொல்லாமல்
ஊமையாய் நீ சென்றால்
உள்ளம் தான் தாங்கிடுமா
உறக்கத்தில் ஆழ்ந்திடுமா...
நீ வாழ்க்கை துணையாக
இருக்காவிட்டாலும் பரவாயில்லை
என் வசந்த கவிதைகளுக்கு
வழிகாட்டியாய் இரு...
நீ காதல் தேவதையாக
இருக்காவிட்டாலும் பரவாயில்லை
என் கவிதை நாயகியாக இரு...
நீ அன்பை ஆயுதமாக்கி
அதை உன் புருவவில்லில் பூட்டி
என் இதயத்தை வீழ்த்திய
இளமங்கை...
உன்னோடு
உன் இரு கண்களோடு
உன் இதயத்தோடு
உன் உள்ளத்தின்
உணர்வோடு மீண்டும்
உறவாடி மகிழ்ந்திட
உத்தரவுக்காக காத்திருக்கிறேன்...
எட்டுப்புலிக்காடு
ரெ.வீரபத்திரன் துபாய்
No comments:
Post a Comment