
பூச்செண்டும் வாழ்த்து மடலும்
நட்பை பேணலாம்
விரக்தியடையாத மனதிற்கு...
சொன்ன வார்த்தையும்
கொடுத்த பரிசும்
ஞாபகம் இருக்கலாம்
உண்மையன்பு உள்ளவர்களுக்கு...
வாழும் சோகமும்
நடந்த கஷ்டமும்
மாண்டு போகலாம்
எழுத்தாளனுக்கு...
எடுத்த வெற்றியும்
அடைந்த தோல்வியும்
மறக்காமல் இருக்கலாம்
வீரனுக்கு...
கேட்ட பேச்சும்
வாங்கிய அடியும்
மறந்து போகலாம்
தாயன்பினில்...
ஆனாலோ!
இங்கு விழுந்த குண்டும்
மடிந்த உயிரும்
மறந்து போகுமா?
செழித்த சந்தோசம்
மரித்துப்போனதை
மறந்து போகுமா
மனம்...
எட்டுப்புலிக்காடுரெ.வீரபத்திரன்
No comments:
Post a Comment