
தமிழீழத்தின் விடிவிற்காய்
தரணியிலே தோன்றியவன்
மாசு இல்லா தூய மனம்
இலட்சியத்தில் மன உறுதி
சத்தியத்தின் மூர்த்தி எம்
தமிழீழத்தின் தலைவன்...
கூனிக் குருகி சோம்பேறிகளாய்
கொட்டாவி விட்டுக் கிடந்தவரை
யானையின் பலம் கொண்டு
ஆர்ப்பரிக்க வைத்த வீரன்...
புழுவுக்கும் அஞ்சி நடுங்கி
பொறி அடங்கி வாழ்ந்தவரை
கொல்ல வரும் குண்டுக்கும்
அஞ்சாமல் இருக்க வைத்த மகான்...
தாய் நாட்டின் பெருமைதனை
அறியாத பேதைக்கு அதை
தெளிவாக எடுத்தியம்பி
தலை நிமிர வைத்த மேதை...
படை கொண்டு வந்தவரை
பயந்தோட வைத்த மகன்
போராட்டம் என்பதற்கோர்
புது வழியை கடைபிடித்த ஆசான்...
நான் முதலில் நீ பிறகு
கூடி வா என்னுடன் என்று
போர்க்களம் சென்று
போராடும் மாவீரன்...
தாயகத்தின் தலைவனையும் அவன்
வழித் தோன்றல்களையும்
அகம் மலர வாழ்த்தி நிற்ப்போம்...
எட்டுப்புலிக்காடு - ரெ.வீரபத்திரன்
No comments:
Post a Comment