
பேருந்து நெரிசலில்
நீ செய்த கண்ணசைவும்
யாருமில்லா தெருவில்
பயந்த படியே உன்னை
அழைத்து சென்றதையும்...
பனி விழுந்து மறையாத
அதிகாலையில் - நீ
கோலம் போடுவதை
பார்க்க வந்த நாட்களையும்...
கடற்கரை மணலில் இருவரும்
கை கோர்த்த படியே செல்லும் போது
நீ சொன்ன வார்த்தைகள்
நிசம் இல்லையானாலும்
நியாயமான பதிலை சொல்...!
நித்தம் நித்தம் உனக்காக
நித்திரை இழந்தேன்
நிலவு உருமாறுவதில்
நியாயம் உண்டு...
நீ மாறியதில்
நியாயமென்ன?
எட்டுப்புலிக்காடு
ரெ.வீரபத்திரன்..துபாய்
No comments:
Post a Comment