Friday, July 2, 2010
சர்வதயாபரனுக்கு சக்தி உண்டா? ஏழுமலையான் கோயிலில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள தங்கம், வைடூரியங்கள் காணவில்லை
500 ஆண்டுகளுக்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, மன்னர் கிருஷ்ண தேவ-ராயர் வழங்கிய அரிய ஆபரணங்கள் காணாமல்போய் விட்டன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஆபரணங்கள் என்ன ஆயிற்று? என்று தேவஸ்-தான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
15ஆ-ம் நூற்றாண்டில், விஜயநகர பேரரசை கிருஷ்ண தேவராயர் ஆண்டு வந்தார். அவர் திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் தீவிர பக்தர். அவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 7 முறை சென்று இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் ஏராளமான தங்க, வைர, வைடூரிய நகைகளை காணிக்கையாக செலுத்தி இருக்கிறார்.
கிருஷ்ண தேவராயரின் முடிசூட்டு விழா நடந்து 500 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அய்தரா-பாத்தில் வரும் 5ஆம் தேதி மிகப்பெரிய விழாவை ஆந்-திர அரசு நடத்துகிறது. இந்த விழாவை, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மன்னர் கிருஷ்ண தேவராயர் வழங்கிய அரிய ஆபரணங்களின் நிழல்படக்கண்காட்சி நடத்த, திருப்பதி கோவில் நிருவாக அதிகாரி கிருஷ்ணாராவ் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விளக்கம் கேட்பு
இதைத்தொடர்ந்து நகைகளை நிழல்படம் எடுக்க நகைகள் பிரிவை அணுகிய போது ``கிருஷ்ண தேவ-ராயர் வழங்கிய நகைகள் ஏற்கெனவே 40 ஆண்டு-களுக்கு முன் தங்க கட்டிகளாக உருக்கப்பட்டு கஜானா-வில் சேர்க்கப்பட்டு விட்டது என்று நகைகள் பொறுப்பு அதிகாரி பதில் அளித்து இருக்கிறார்.
அந்த நகைகள் உருக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்ததும் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தேவஸ்தான உயர் அதிகாரிகள், ஆபரண பிரிவு நிருவாக அதிகாரி குரு ராஜாராவிடம் விளக்கம் கேட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இது பற்றி குருராஜாராவ் கூறியதாவது:-
கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் இப்-போது எங்களிடம் இல்லை. அதை 40 ஆண்டு-களுக்கு முன்பே சாதாரண நகைகளுடன் சேர்த்து, கோவிலில் உள்ள உருக்கு பட்டறையில் உருக்கி தங்க கட்டிகளாக ஆக்கி விட்டோம். அவை தேவஸ்தான கஜானாவில் சேர்க்கப்பட்டு விட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.
அப்போது இந்த பிரிவுக்கு பொறுப்பாளராக யார் இருந்தார்? எந்த அதிகாரியின் உத்தரவின் படி ஆபர-ணங்கள் உருக்கப்பட்டது? என்பது பற்றி விசாரித்து வருகிறோம். இவ்வாறு குரு ராஜாராவ் கூறினார்.
இது பற்றி கோவில் நிருவாக அதிகாரி கிருஷ்ணராவ் கூறியதாவது:-
அனுமதி அளித்தது யார்?
கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் உருக்-கப்பட்டு விட்டதாக, ஆவணத்தில் எழுதப்பட்டு இருப்பது உண்மைதானா? இந்த ஆவணம் உண்மையானது தானா? இந்த முடிவை எடுத்தது யார்? அனுமதி அளித்த அப்போதைய அதிகாரி யார்? என்று விசாரணை நடத்தி வருகிறோம்.
முழு விசாரணைக்குப் பின் அனைத்தும் வெட்ட வெளிச்சமாகி விடும். இவ்வாறு கிருஷ்ணாராவ் கூறினார்.
அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு கூறு-கையில், அரிய நகைகள் உருக்கப்பட்டு விட்டதாகக் கூறு-கிறார்கள். இதில் நடந்த உண்மை என்ன என்-பதை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. அய்தராபாத் விழாவில் நடக்க இருந்த கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் நிழல்பட கண்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது என்றார்.
மன்னர் ஏழு முறை வந்திருக்கிறார்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கிருஷ்ண தேவராயர் 1513ஆ-ம் ஆண்டு முதல் 1521 வரை 7 முறை வந்து தரிசனம் செய்து இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் ஏராளமான விலை மதிப்பில்லாத நகைகளை காணிக்கையாக கொடுத்து இருக்கிறார் என்று கோவில் பதிவேடுகளில் தெளிவாக எழுதப்-பட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-
1513ஆ-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி கிருஷ்ண தேவராயர் தனது மனைவிகள் திருமலா-தேவி, சின்னா தேவி ஆகியோருடன் திருப்பதி வந்-தார். அப்போது அவர் நவரத்தின கிரீடம் ஒன்றையும், 25 வெள்ளித் தட்டுகளையும், 2 தங்கக் கிண்ணங்-களையும் காணிக்கையாக படைத்து இருக்கிறார்.
தங்க மணிமகுடங்கள்
1513ஆ-ம் ஆண்டு மே 2-ஆம் தேதியும், ஜூன் 13ஆம் தேதியும் இரு முறை அவர் திருப்பதிக்கு வந்து, மூலவருக்கு விலை மதிக்க முடியாத ஆபரணங்களை செலுத்தி இருக்கிறார். மேலும் உற்சவர்களுக்கு 3 தங்க மணி மகுடங்-களையும் படைத்து இருக்-கிறார்.
1514 ஜூலை 6-ஆம் தேதி, 30 ஆயிரம் வராகன்-களில் (தங்க காசுகள்) ஏழுமலையானுக்கு, கிருஷ்ண தேவராயர் கன-காபிஷேகம் நடத்தினார். அவை கோவிலுக்கு கொடுக்கப்பட்டன.
1515ஆ-ம் ஆண்டு அவர் வருகை தந்த போது, ரத்தின கற்கள் பதித்த தங்க மகர தோர-ணம் ஒன்றை காணிக்கை-யாக செலுத்தி இருக்கி-றார். இது மிகவும் விலை-மதிப்பு மிக்கது.
1517ஆ-ம் ஆண்டு ஜன-வரி 2ஆம் தேதி கிருஷ்ண தேவராயர், தனது மற்றும் அவரது 2 மனைவிகளின் வெங்கல சிலைகளை கோயி-லில் பிரதிஷ்டை செய்-தார். அந்த சிலைகள் இப்-போதும் மகாவா-யிலின் உள்பிரகாரத்தில் உள்ளன.
1518ஆ-ம் ஆண்டு செப்-டம்பர் 9-ஆம் தேதி, கிருஷ்ண தேவராயர் ஏழுமலையான் கோவி-லுக்கு வந்தபோது, கோவி-லின் கருவறை விமான கோபுரத்தில் 30 ஆயிரம் வராகனில் தங்க தகடு பதித்தார்.
1521ஆ-ம் ஆண்டு பிப். 17ஆம்தேதி அவர் ஏழு-மலையானுக்கு நவரத்தின கிரீடத்தை வழங்கினார். விலை மதிப்பு மிக்க வைர பீதாம்பரத்தையும் கொடுத்-தார்.
இப்படியாக, ஏழு-மலை-யான் கோவிலுக்கு, மன்னர் கிருஷ்ண தேவ-ராயர் படைத்த பல ஆயி-ரம் கோடி ரூபாய் மதிப்-புள்ள பழம்பெரும் வைரம், வைடூரியம், மரகதம் போன்ற நவரத்தினங்-களால் ஆன நகைகள் என்ன ஆனது? என்பது பெரும் கேள்விக்குறியா-கவே இருக்கிறது.
தன்னுடைய நகை-களையும், வைடூரியங்-களையும் பாதுகாக்க முடியாத கற்சிலையான ஏழுமலையானை நம்பிச் செல்லும் பக்தர்கள் என்று-தான் உணர்வார்களோ!
நன்றி- விடுதலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment