
2002-ல் டென்மார்க் வானவில் இணையதளம் இந்த கவிதையை சிறந்த கவிதையாக தேர்ந்தெடுத்து கலைமாமணி விருது வழங்கியது. அந்த விருதை கலைமாமணி மணவை முஸ்பா அவர்கள் குவைத்தில் நான் எழுதிய கனவே கலையாதே என்ற கவிதை நூலை வெளியிட்டு விருதையும் வழங்கினார்.
வரைமுறையற்ற கலவரங்களுக்கு
கி.மு.வும், கி.பி.யும் ஒன்றுதான்
மதம் பிரித்து சாதி எடுத்து
சமத்துவ புரங்களிலும்
மனித பிணங்களை
நட்டுவைத்தார்கள்...
வீட்டிலே சுமக்கப் பயந்து
பள்ளிக்குக் குழந்தைகளை
பொதி சுமத்தி அனுப்புகிற
பெற்றோர்கள்...
காதலுக்கும் கவ்ரவத்துக்கும்
முடிச்சுப்போடுகின்ற ஏழைகள்
வாழ்க்கைக்கும் வரதட்சணைக்கும்
தீர்வு காணமலே
செத்துப் போகும் கொடுமை...
இங்கு
காதலர்களை எதிர்ப்பதாய்
சொல்லிவிட்டு
சாதியையும்,மதத்தையும்
எரிக்கப் பயந்து மனசுகளை
எரிப்பவர்கள்...
பெண்ணென்றால்
கருவறையையே
கல்லறையாக்கிவிடும்
மனிதங்கள்...
நிரந்தரமற்ற
இந்த உலகில் 'நான்' என்று
சோம்பித் திரியும்
போலி சாமியார்களோடு
இவர்களும் காமம் சுகிக்கும்
அவலங்கள்...
கி.மு.என்ன கி.பி. என்ன
இருபத்தியோரு நூற்றாண்டடென்ன
சுற்றுகிறவரை
இன்னும் தொடராமல்
இருக்கப் போவதில்லை
இந்த ரணங்கள்
மனிதர்கள்
மனிதங்களாகும் வரை..
No comments:
Post a Comment