Saturday, June 5, 2010

யார் செய்த குற்றம்- விசமிகளா? தமிழிஷ் இணையமா?

அன்பான தமிழிஷ் தமிழ் வாசர்களே!

எனது பாசமிகு நண்பரும் முற்போக்கு சிந்தனையாளரும், இளம் எழுத்தாளர்களில் சமீபகாலமாக மிகச்சிறந்த பல படைப்புக்களை கொடுத்து வருபவர் தான் என் நணபர் தேவா.இவர் துபாயில் வேலை செய்கிறார் warrior பெயரில் வலைதளம் வைத்திருக்கிறார்.

இந்த பாலவன சோலையில் வற்றாத நீறூற்றாய் அவரின் படைப்புகள் வந்துகொண்டிருந்தன. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மனதில் இவர் வெகு சீக்கிரத்தில் இடம் பிடித்தார்.ஆனால் இவரின் படைப்புக்கள் வெற்றிப்பெற்றுக்கொண்டிருப்பதை சகித்துக்கொள்ள முடியாத சில குள்ளநரிகளின்(கையலாகதவர்கள்,துரோக கும்பல்)சதி வேலையினால் நேற்று அவர் இட்ட பதிவான சாதியே.....உன்னை வெறுக்கிறேன்....!என்ற ஒரு பதிவு.அந்த பதிவை தமிழ்ஷ் இணைத்தார் அந்த பதிவு முன்னி இடுகையில் இருந்தது, ஆனால் அந்த பதிவு பின்பு தமிழ்ஷ் முன்னனி இடுகையில் இருந்து திடீர் என்று காணவில்லை.


முன்னனி இடுகையில் குறைந்தபட்சம் 5 மணி நேரம் இருக்கும், அதிகபட்சம் 12 மணி நேரம் இருக்கும். ஆனால் இது 2 மணி நேரத்தில் காணமல் போய்விட்டது. யார் செய்த சதியோ...

இதற்கு முழு பொருப்பேற்று தமிழிஷ் இணையம் விளக்கமளிக்க வேண்டும். இது தேவாவிற்கு மட்டும் நடந்ததாக எழுத்தாளர்கள் நினைக்க கூடாது. ஒட்டு மொத்த எழுத்தாளர்களர்களுக்கு விட்ட சவாலாக ஏற்று அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

எழுத்தாளர்களே! இன்று தேவாவுக்கு நாளை உங்களுக்கும் நேரலாம்.
விசமிகளை நாம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. இதற்கு சரியான விளக்கம்தமிழிஷ் இணையத்தார்கள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுவரை காத்திருப்போம்.


தேவாவின் வேண்டுகோள்;


அன்பான வாசகர்களே... நான் துபாயில் இருந்து பதிவிடுவது அனைவருக்குமே தெரியும். தாயகத்தை விட்டு பாலை மண்ணிற்கு பொருளீட்டும் பொருட்டு வந்த எமக்கு இந்த தமிழ் இணையங்களும், வலைப்பூக்களும் தான் ஆதரவு.

ஒரு சாதாரண பதிவரான நான் இன்று காலை பதிவிட்ட சாதியே உன்னை வெறுக்கிறேன் என்ற கட்டுரை தமிழிசில் இருந்து தூக்கப்பட்டு விட்டது....காரணம் அறிய வேண்டி... தமிழிசை துலாவியபோது...அவர்கள் கொடுத்துள்ள காரணங்கள் அறிந்த நான் பின் வரும் கேள்வியோடு இருக்கிறேன்.....யாரவது

1) உங்களின் வலைப்பூ பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே உங்களின் இடுகைக்கு பல்வேறு திருட்டுத்தனமாக நிறைய ஐ.டிகள் மூலம் வாக்களித்தால் உங்களின் இடுகை தமிழிசை விட்டுத் தூக்கப்படும்.


என்னுடைய கேள்வி இது தான் என்னுடைய வாசகர்கள் 32 பேர் வாக்களித்தும் யாரோ விசமத்தனம் செய்ததற்காக இடுகையை தூக்கியது எந்த விதத்தில் நியாயம்?


இது என்னுடைய குரல் மட்டுமல்ல....இதற்கு முன் பாதிக்கப்பட்டவர்கள் சார்பகவு இந்த கோரிக்கையை தமிழிசுக்கு வைக்கிறேன். இதற்கான தனிப்பட்ட மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன்.

இதனால் நல்ல பதிவுகள் மக்களைச் சென்றடையாமல் யாரோ சிலர் இந்த வலைத்தளத்தை கண்ட்ரோல் செய்யும் அபாயமும் இருப்பதால் இந்த இடுகையை அவசரமாக இடுகிறேன்....


அட இந்த பதிவும் தமிழ்ஷ் வரவில்லை. இப்படி செய்வதால் ஒருபதிவரின்எழுதும்ஆர்வம் குறைந்து விடும்...

No comments: