Saturday, June 5, 2010

செம்மொழி மாநாட்டை நடத்த விடமாட்டோம்

"கள் இறக்க அனுமதி கேட்டு போராடும் கொங்கு மண்டல பெண்களை தொடர்ந்து இழிவாக பேசும் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படும்; தவிர, செம்மொழி மாநாட்டையும் நடத்த விடமாட்டோம்' என, கொங்கு முன்னேற்றக் கழக மகளிரணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொ.மு.க., மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம், கோவை செஞ்சிலுவைச் சங்க கட்டடத்தில் நேற்று நடந்தது. மாநில நிர்வாகி கள் கல்பனா, விஜயலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். கோவை மாநகர் மாவட்ட அமைப்பாளர் கள் கிருஷ்ணவேணி, தமிழ்ச் செல்வி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கருமத்தம்பட்டியில் நடந்த இலவச, "டிவி' வழங்கும் நிகழ்ச்சியில், ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கொங்கு மண்டல பெண்களை இழிவு படுத்தும் வகையிலும், அருவருக்கத்தக்க வகையில் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சூலூர், கோட்டூர் பகுதிகளில் நடந்த கூட்டத்திலும் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின், மாநில மகளிர் அணி அமைப்பாளர் கல்பனாதேவி, விஜயலட்சுமி, அமிர்தம், மாநகர அமைப்பாளர் கள் கவிதா, கிருஷ்ணவேணி ஆகியோர் அளித்த பேட்டி:கோவை மாவட்ட தி.மு.க., செயலரும், கொங்கு மண்டல அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமி, தொடர்ந்து கொங்கு மண்டல மக்களை, குறிப்பாக பெண்களை அவதூறாக பேசி வருகிறார். இவரும் இம் மண்ணில் பிறந்தவர் தான். அதனால் தான் இவரை பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பினோம்; அமைச்சராகவும் உள்ளார்.சமீபத்தில், கொங்கு மண்டல மக்கள் நன்றி மறந்தவர்கள் என்றும், கள் இறக்கும் போராட் டத்தில் பெண்கள் பங்கேற்றால் அந்த குடும்பம் உருப்படுமா என்றெல்லாம் பேசியுள்ளார்.கள் இறக்க அரசு அனுமதித் தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். இன்று 70 சதவீதம் பெண்கள், விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விளைபொருட் களுக்கு விலை இல்லை. பல விவசாயிகள் வறுமையில் உள் ளனர். விதை, உரம் வாங்கவும், குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பும் பெண்கள், தாலியை அடகு வைக்கும் கட்டாயத் துக்கும் தள்ளப்படுகின்றனர்.

கொங்கு மண்டல பெண்கள் எந்தக் கட்சிக்கும் செல்ல மாட் டார்கள். மனதளவில், உணர்ச்சிப் பூர்வமாகத்தான் கொங்குநாடு முன் னேற்றக் கழகத்தில் சேர்ந்துள் ளனர். இது தெரியாமல், கொங்கு இனத்தைச் சேர்ந்த அமைச்சரே, பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்.எதற்காக அவரை சட்டசபைக்கு மக்கள் அனுப்பினார் களோ, அதை மறந்து விட்டார். நன்றி மறந்த அவர், தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.எங்கள் வாழ்வாதாரத்துக்காக கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்பது உரிமை. இதை கொச்சைப்படுத்தி, கொங்கு மண்டல பெண்களை தொடர்ந்து கேவலப்படுத்தி பேசும் அமைச்சர், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.அப்படி இல்லையென்றால், வரும் 15ம் தேதி, கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தி.மு.க., தலைமை, அமைச்சர் பேசியவற்றை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுவும் நடக்கவில்லை என் றால், கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டை நிம்மதியாக நடத்த விடமாட்டோம். மாநாட்டுக்கு வரும் அமைச்ச ருக்கு கருப்புக் கொடி காட்டுவதோடு, மாநாடு நடக்கும் கொடிசியா வளாகத்துக்குள் எங்களின் ஆடு, மாடுகளை ஓட்டி வந்து போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments: