Wednesday, June 2, 2010

புலி விரைவில் உறுமும் - நரிகள் ஓடி ஒளியும்சுவிசு இதழுக்கு பழ. நெடுமாறன் அளித்த நேர்காணல்

புலி விரைவில் உறுமும் - நரிகள் ஓடி ஒளியும்
சுவிசு இதழுக்கு பழ. நெடுமாறன் அளித்த நேர்காணல்
தமிழக அரசியலில் மூன்றாவது மையப்புள்ளியாக உருவாகியிருக்கிறார் நெடுமாறன். இலங்கைத் தமிழர் பாது காப்பு இயக்கம் மூலம் போர் நிறுத்தம் கேட்டு அவர் முன்னெடுத்த போராட் டங்கள் மத்திய மாநில அரசுகளின் அச்சாணிகளையே அசைத்துப் பார்த்தன. கடும் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் சமரசமற்ற போராட்டக்காரனின் வாழ் வாக நீண்டு கொண்டிருக்கும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பெரிய வர் நெடுமாறனை சென்னை வளசரவாக் கத்தில் இருக்கும் அவரது அலுவலகத் தில் ஆதவன் இதழுக்காகச் சந்தித்தோம்....


பார்வதியம்மாளை வரவேற்க நீங்களும் வைகோவும் ஏன் தனியாகச் சென் றீர்கள்? ஆயிரக்கணக்கான தமிழுணர் வாளர்களைத் திரட்டி அவரை வரவேற் கச் சென்றிருக்கலாமே?

பார்வதியம்மாள் உடல் நலம் நலிந்த நிலையில் இருக்கிறார். கூட்டம் கூடி பரபரப்புச் செய்து அவரை வரவேற்பது என்பது அவரது உடல் நலத்திற்கு உகந் ததல்ல, அவருக்கு மருத்துவ சிகிச் சையை விட மன ரீதியான சிகிச்சை அவசியமாக இருந்தது. கணவரை இழந்து கடந்த ஏழு மாதங்களாக அவர் இராணுவ முகாமுக்குள் அனுபவித்த கொடுமைகள் எல்லாம் சேர்ந்து அவர் மனம் நைந்து போன நிலையில் மலேசி யாவில் இருந்து வருகிறார். அவர் யார் யாருடன் நெருங்கிப் பழகினாரோ அவர் களுடன் அவரைச் சில காலம் தங்க வைத்திருந்தால் அவரது உடல் நிலை யையும் மன நிலையையும் கொஞ்சம் ஆரோக்கியப்படுத்த முடியும் என நாங் கள் நினைத்தோம். அவர் எனது குடும் பத்தாருடனும் வைகோ குடும்பத்தாருட னும் நெருங்கிப் பழகியவர்கள். ஆக நாங்கள் இம்மாதிரியான குடும்பச் சூழ

லில் அவரை வைத்திருக்க விரும்பி னோமே தவிர அவரை வைத்து அரசி யல் நடத்த வேண்டிய அவசியம் எனக்கோ வைகோவுக்கோ இல்லை. மேலும், 'பார்வதியம்மாள் வருகிறார்!' வர வேற்க வாருங்கள்' என்று ஒரு அறிக்கை விட்டாலே போதும். பல்லாயிரம் இளைஞர்கள் திரண்டிருப்பார்கள். ஆனால் பார்வதியம்மாளின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு நாங்கள் அப்படிச் செய்ய வில்லை. ஆனால் பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பிய கருணாநிதியோ அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்கிறார். அப்படி என்றால் நாங்கள் விமான நிலையம் சென்ற போது புற நகர் கமிஷனர் ஜாங் கிட் தலைமையில் போலீசார் குவிக்கப் பட்டு கமிஷனரே நின்று எங்களை எல் லாம் தடுத்தாரே? போலீஸ் துறையை தன் கையில் வைத்திருக்கும் கருணா நிதி, கமிஷனர் தானாக வந்து எங்க ளைத் தடுத்தார் என்று கூறுகிறாரா? உண்மையில் பார்வதியம்மாள் வருகிறார் என்று தெரிந்த உடன் இவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்குப் பேசியிருக் கிறார். அவர் குடிவரவு அதிகாரிகளிடம் பேசி இரக்கமில்லாமல் பார்வதியம் மாளைத் திருப்பி அனுப்பி விட்டார்கள் என்பதுதான் உண்மை.


திருப்பி அனுப்பி விட்டு மீண்டும் விசா வழங்க விதிக்கப்பட்ட நிபந்தனைகள் லேசானவைகள்தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறாரே?

விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் லேசானதா. கடுமையானதா என்பதை பாதிக்கப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டுமே தவிர நிபந்தனைகளைப் போட்டவரே சொல்லக் கூடாது. அவர் சொல்லியிருக்கும் நிபந்தனைகள் பார்வதி யம்மாள் இங்கு வந்து விடக்கூடாது என் பதற்காகவே போடப்பட்ட நிபந்தனைகள் போலத் தெரிகிறது. சிங்கள இராணுவ முகாமினுள் விதிக்கப்பட்டுள்ள நிபந்த னைகளுக்கும் இவர்கள் விதித்த நிபந் தனைகளுக்கும் பெரிய வித்தியாச மில்லை.


நீங்களும் வைகோவும் பார்வதியம்மாளை வைத்து தமிழின எழுச்சி மாநாடு நடத் தத் திட்டமிட்டிருந்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ சட்டமன்றத்திலேயே குற்றம் சுமத்தினாரே?

பார்வதியம்மாளுக்கு இப்போது வயது 81. சுமார் 15 ஆண்டுகாலம் தமிழ கத்தில் அவரும் வேலுப்பிள்ளையும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இங்கு வாழ்ந்த காலத்தில் அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள் என்பது கூட பலருக்கும் தெரியாது. சில நேரங்களில் எங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கு வருவார்கள், வைகோ வீட்டு நிகழ்வுகளுக்குச் செல் வார்கள். வருவதும் தெரியாது போவ தும் தெரியாது. எந்த விதமான அரசியல் மாநாடுகளுக்கோ கூட்டங்களுக்கோ கூட அவர்கள் சென்றதில்லை என்னும் போது இப்போது வயது முதிர்ந்து நடக்க இயலாத நிலையில் பார்வதி யம்மாள் வந்து செம்மொழி மாநாட்டுப் பந்தலைப் பிரித்தெறிந்து விடுவார் என்று நினைப்பதும் அவரை வைத்து தமிழின எழுச்சி மாநாடு நடத்த நானும் நண்பர் வைகோவும் திட்டமிட்டோம் என்பதும் கருணாநிதி குழுவினரின் வக்கிர மனத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திடீரென ஈழத்துக்கு ஆதரவாகப் பேசினார் ஜெயலலிதா. தேர்தல் முடிந்த தும் ஈழம் பற்றியோ, ஈழ மக்களின் துன்பம் பற்றியோ சுத்தமாக பேசுவதில்லையே?

இலங்கைத் தமிழர் பாதுகாப்பியக் கம் சார்பாக நாங்கள் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய போது மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியைப் பார்த்த ஜெயல

லிதா ஈழம் பற்றிப் பேசினார். தேர்தல் முடிந்ததும் பேசாமல் விட்டார். அடுத்த தேர்தலில் ஈழத்தால் ஆதாயம் இருக்கும் என்றால் மீண்டும் பேசுவார். அதிமுக மட்டுமல்ல திமுகவும் அப்படித்தான். அதன் தலைவர் கருணாநிதியும் அப்ப டித்தான். ஆதாயம் இருந்தால் பேசுவார்கள் ஆதாயம் இல்லை என்றால் கைவிட்டு விடுவார்கள். அதனால்தான் இந்த இரண்டு கழகங்களுமே மக்களிடம் செல்வாக்கிழந்து வருகின்றன. வலுவான கூட்டணி இருந்தும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட ஒவ்வொரு தொகுதியிலும் நாற்பது கோடி ஐம்பது கோடி செலவு செய்தும் முக்கிய தலைவர்கள் எல்லாம் தோல் வியைத் தழுவினார்களே? அது - இலங்கைத் தமிழர் பாதுகாப்பியக்கம் ஈழத்தை முன் வைத்து மேற்கொண்ட பிரச்சாரம்தான் அவர்களுக்கு தோல்வி யைக் கொடுத்தது.


இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் துவங்கப்பட்ட போது வலுவான மூன் றாவது அரசியல் சக்தியாக எல்லோரா லும் பார்க்கப்பட்டது. நீங்கள் ஏன் அதை மூன்றாவது சக்தியாக உருவாக்க வில்லை?

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைத் துவங்கும் போதே ஈழப் பிரச்சனையில் ஒத்த கருத்துள்ள ஆனால் திமுக, அதிமுக ஆகிய இரு வேறு கூட்டணிகளில் அங்கம் வகிக்கிற கட்சிகளை ஒருங்கிணைத்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்னும் பெயரில் பொது அமைப்புக் காண நான் பட்ட பாடு பெரும்பாடு. இந்த அணி ஒரு அணியாக உருவாகி அரசியல் ரீதி யாக போராடியிருந்தால் நிச்சயமாக பெரு வெற்றி பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஏற்கெனவே வெவ்வேறு கூட்டணிகளில் இக்கட்சிகள் இருந்ததாலும் திடீரென தேர்தலை சந்திக்க நேர்ந்ததாலும் கூட்டணிகளை விட்டு விலக முடியாத நிலையில் இருந் தார்கள். எனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் நண்பர்களிடம் நான் சொன்னது, 'தேர்தல் திருவிழா என் பது ஒரு மாத கால விழாதான்; ஆனால் நாம் ஈழப் பிரச்சனைக்காக எப்போதும் போராட வேண்டும். அதற்குள் ஒருவர் மனம் புண்படுகிற மாதிரி இன்னொருவர் அறிக்கை விடாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டேன். இப்போதும் கேட்டுக் கொள்கிறேன். என்னால் என்ன செய்ய முடிந்ததோ அதை நேர்மையாகச் செய்தேன். செய்கிறேன். தவிரவும் தமிழ கத்தின் தேவையான மூன்றாவது அணியின் அவசியத்தையும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.


தமிழர்கள் துயர் சூழந்த காலச் சகதியில் சிக்கியிருக்கும் போது பிரமாண்டமான செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறதே? ஈழத் தமிழறிஞர்கள் கூட இதற்கு வருகிறார்களே?

யார் வருகிறார்கள்? யார் யார் பேசுகிறார்கள் என்பதல்ல பிரச்சனை. என்ன அவசியத்துக்காக இந்த மாநாடு இப்போது நடத்தப்படுகிறது என்பதுதான் இப்போது முக்கியம். உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்பது உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்களின் முயற்சியால் உருவான அமைப்பு ஆகும். 1962ஆம் ஆண்டு கீழ்த்திசை அறிஞர் களின் மாநாடு புது டில்லியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட தமிழறிஞர் களான தனிநாயகம் அடிகளும், வ. அய். சுப்பிரமணியமும், மூத்த தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் தலைமையில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார்கள். உலகெங்கிலும் உள்ள தமிழாராய்ச்சி களை ஒழுங்கமைக்கும் நோக்கோடு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் துவங்கினார்கள். இந்த அமைப்பு நடத்துவதுதான் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆகும். மலேசியாவில், பிரான் சில், மொரீஷியசில் என வெளிநாடு களில் தமிழ் மாநாடு நடந்த போதெல் லாம் உண்மையான தமிழாராய்ச்சி மாநாடுகளாக நடந்தன. எப்போதெல்லாம் அது தமிழகத்தில் நடந்ததோ அப்போ தெல்லாம் அது வெற்று ஆர்ப்பாட்ட மாநாடாகவே நடந்து வருகிறது. இரண் டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னை யில் நடந்தது. அப்போது கல்வி அமைச் சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் வரவேற்புக் குழு அமைக் கப்பட்டது. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி தனக்கு இந்த மாநாட்டில் முக்கியத்துவம் எதுவும் இல்லை என்று கருதினார். தமிழ றிஞர்களின் ஆய்வு மாநாடு சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. ஆனால் தீவுத் திடலில் ஒரு ஆரவார மாநாட்டினை கருணாநிதி நடத்தினார். மெரீனா கடற்கரையில் சிலைகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என தம் பட்டமடித்து, தமிழாராய்ச்சிக்கான முக்கி யத்துவம் பின் தள்ளப்பட்டது. இதழ்களில் கூட பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வு மாநாட்டைப் பற்றிய செய்திகளை விட தீவுத் திடலில் நடைபெற்ற ஆரவார மாநாட்டைப் பற்றிய செய்திகளே முக்கி யத்துவம் பெற்றிருந்தன. எம்.ஜி.ஆர் மதுரையில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தினார். அப்போது நான் மதுரை சட்டமன்ற உறுப்பினராக இருந் தேன். அந்த மாநாட்டிலும் ஆரவாரத் திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக சிறந்த தமிழறிஞரான தேவநேயப் பாவாணர் அவர்கள் எழு திய ஆய்வுக் கட்டுரையை பிரதி எடுத் துத் தரக் கூட ஏற்பாடு இல்லை. புல நூறு கோடி ரூபாய் அந்த மாநாட்டிற்காக செவழிக்கப்பட்டதுதான் மிச்சம். ஜெய லலிதா முதலமைச்சராக இருந்த போது தஞ்சையில் நடத்தப்பட்ட மாநாட்டிலும் தமிழாராய்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டு வெற்று ஆரவாரத்திற்கு முதன்மை அளிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஈழத்தமிழறிஞர் சிவத்தம்பி உட்பட பலர் வெளியேற்றப் பட்டார்கள்.

இப்போது 300 கோடி ரூபாய் செலவில் கோவையில் கருணாநிதி நடத்துகிற மாநாட்டால் தமிழுக்கு எந்த விதமான நன்மையும் ஏற்படப் போவ தில்லை. இவர் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தையே பிளவு படுத்தி இந்த மாநாட்டை நடத்துகிறார். இந்த மாநாட் டின் நோக்கம் எல்லோருக்கும் தெரிந்தது தான். கொத்துக் கொத்தாக ஈழத்தில் சிங்கள அரசால் தமிழ் மக்கள் கொல்லப் பட்ட போது அதை வேடிக்கை பார்த்த தோடு துரோகம் செய்து பெயரைக் கெடுத்துக் கொண்ட கருணாநிதி செம் மொழி மாநாடு நடத்தி அதைச் சரி செய்யப்பார்க்கிறார். ஆனால் தமிழ் மக்கள் ஒரு போதும் கருணாநிதியை மன்னிக்கப் போவதில்லை.


இனக்கொலை குற்றவாளிகளை தண்டிப் பதற்கான சூழல் வருமா?

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளை உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கடைப்பிடிக்கக் கோரி னோம். போர்க்குற்றவாளிகளான இராஜ பட்சே கும்பலை பாதுகாக்கிற வேலையை இந்தியா செய்து கொண்டி ருக்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் கொண்டு வரப் பட்ட போது இந்தியாதான் அந்தத் தீர் மானத்தைத் தோற்கடித்து இலங்கை யைப் பாதுகாத்தது. ஆக இராஜபட்சே, பொன்சேகா மட்டுமல்ல இனக் கொலைக்கு துணைபோன இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் போர்க் குற்றவாளிகள்தான். பாலஸ் தீனத்தில், ருவாண்டாவில், ஆர்மீனியா வில் என எங்குமே இனக்கொலை நடந்த போது வல்லரசுகள் தலையிட் டுத் தடுத்து மக்களைக் காப்பாற்றியதாக வரலாறு இல்லை. சிங்கள பேரினவாதி களிடமிருந்து தமிழ் மக்களைக் காப் பாற்றுவதால் என்ன லாபம் இந்த வல் லரசுகளுக்கு? ஆக தமிழ் மக்களாகிய நாம்தான் இனக்கொலைக் குற்றவாளி களை கூண்டிலேற்ற போராட வேண் டும். தலைவர் பிரபாகரனின் வழியில் நின்று தமிழ் மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.


வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தொடர்பான சர்ச்சை ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? மீண்டும் ஈழ மக்களின் விடுதலைப் போர் வெடிக்குமா?

ஈழ விடுதலைப் போராட்டம் என்பது நீண்ட கால வரலாற்றுப் போக் கைக் கொண்டது. அவர்கள் முப்ப தாண்டுகாலம் அறவழியில் போராடினார் கள் அவை வெற்றி பெறாத நிலையில் தான் ஆயுதப் போருக்குச் சென்றார்கள். 1948 லிருந்து 1977 வரை தனிநாடு கேட்கவில்லை அப்போது கூட அவர் கள் எங்களையும் சமமாக மதியுங்கள் என்றுதான் கேட்டார்கள். வேறு வழியே இல்லை என்னும் நிலையில்தான் ஆயுத மேந்தி முப்பதாண்டுகாலம் வீரம் செறிந்த போரை புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரன் தலைமையில் போராளி கள் நடத்தினார்கள். அந்தப் போராட்டம் ஒரு தற்காலிக பின்னடவைச் சந்தித்தி ருக்கிறது என்றுதான் நான் நினைக் கிறேன். இவ்வளவு வல்லரசுகள் கூடி சிங்கள அரசுக்குத் துணை நின்று தன் னந்தனியாய் போராடிய தம்பியின் படைகளை தற்காலிகமாக வென்றிருக் கிறார்கள். இது ஒரு பின்னடைவு. ஆனால் முன்னிலும் பார்க்க கோடானு கோடி தமிழ் மக்களிடையே சுதந்திர தமிழீழத்தின் தேவையும் அதன் தவிர்க்க முடியாத நியாயமும் பெரு நெருப்பாய் எரியத் துவங்கியிருக்கிறது. தங்களின் அடுத்த தலைமுறையாவது நிம்மதியாய் வாழ சுதந்திர தமிழீழப் போராட்டத்தில் அவர்கள் தங்களை இணைக்க ஆயத்தமாய் இருக்கிறார்கள். தம்பி இருக்கிறார்! தக்க நேரத்தில் புலி உறுமும்.... அப்போது சல சலத்துக் கொண்டிருக்கும் இந்த நரிகள் ஓடி ஒளிய ஒரு இடம் தேட வேண்டி யிருக்கும்.

No comments: