Monday, June 14, 2010

பெற்றும் சுமையாய்.





அன்று பள்ளிக்கு சென்ற
பாதைகளெங்கும் - இன்று
பல மாடிக் கட்டிடங்கள்
முளைத்துவிட்டன...

அன்று ஐந்து பைசாவுக்கு
சீயக்காய் வாங்கி
குளிக்க முடியாத என்னிடம்
இன்று ஐம்பது ரூபாய்
சாம்பு கேட்கிறாள் தங்கை...

இந்த வருடமாவது
பெரிய பள்ளிக்கூடத்துக்கு போகும்
சின்னவனுக்கு
முழுகால் சட்டை
எடுத்துவிட வேண்டுமென்று
இரவும் விழித்திருந்து
வேலை பார்க்கும்
டீ கடையில் அப்பா...

பசி பட்டினியோடு
தாளாத வறுமையிலும்
பட்டங்கள் பல பெறவைத்து
பதவியிலும் அமர்த்தி
பரவசத்துடன்
பார்க்க நினைத்த
அப்பாவின் கனவுகள்
திசைமாறியது ஏனோ?

பசுமையான கனவுகளுடன்
வேலை வேலையென தேடி
அன்றும் இன்றும்
வீட்டிற்கு பாரமாய்
பட்டம் மட்டும் கையில்
பட்ட மரமாய் நான்?

இருட்டில் தொலைந்த வானம்
தேடிக்கொண்டிருக்கிறது
இன்றும் புதியதோர் விடியல்...
பட்டமரமாய் விடாமல்
துளிர்த்துக்கொண்டிருக்கின்றன
மனிதன் ஆசைகள்...

No comments: